NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குப்பி விளக்கை பயன்படுத்தி கல்வி பயிலுங்கள் – அதிகாரியின் கூற்றால் வெடித்தது சர்ச்சை!

தான் கூறிய கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையிலேயே குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

இலவச மின்சாரத்திற்கு மக்கள் பழகிவிட்டதாகவும், தற்போது மாறிவரும் சூழ்நிலையில் அதைக் கையாள முடியாத நிலையில் உள்ளதாகவும், ஆகையினால் பொது மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் கூறினார்.

“நாங்கள் ஒன்பது ஆண்டுகளாக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தற்போது, ஒரே கட்டமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் ஒரு குழந்தைக்கு கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் தேவை என கேள்வி எழுப்பிய நோயல் பிரியந்த, ஒரு குப்பி விளக்கு போதுமானது என்று கூறினார்.

Share:

Related Articles