குருநாகல் – ரஸ்நாயகபுர கடிகாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் கொட்டாவ பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.