குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரியத்தகடுகளை வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின் கட்டத்திற்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.