NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குற்றங்களை குறைப்பப்தற்காக களமிறங்கும் சிறப்பு அதிரடிப்படையினர்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ”ஆனந்த விஜேபால” தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை செயற்பாட்டில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என கூறியுள்ளார்.

மேலும், தென் மாகாணத்தில் சமீபத்தில் IDAMPETRA துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன், அம்பலாங்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை குறைப்பதற்காக இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்க படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles