(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
குளியாபிட்டிய – ஹெட்டிபொல வீதியின் குருந்துகும்புர சந்தியில் நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் மூனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.