NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குழந்தைகளுக்கான ஆண்டிபயாடிக் மருந்து தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மருத்துவரின் பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதால், உடலின் உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்களின் மரணம் ஏற்படலாம். இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்குள் மனிதன் மரணத்தை தழுவ நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 18 முதல் 24 வரை நடைபெறும் ‘உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம்’ குறித்து கருத்து தெரிவித்த அவர், உலக நுண்ணுயிர் எதிர்ப்பு நிபுணர்கள் இதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பக்டீரியாவை வலுவிழக்கச் செய்து கொல்லும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பள், பக்டீரியா தொற்று ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கின்றனர்.

வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையில்லை.

இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே எடுக்க வேண்டும்,” என்றும் மருத்துவர் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles