இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மதார் புகையிரத நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையின்படி, பிரியங்கா சவுராசியா என்ற பெண் அவரின் 4 மாத குழந்தையுடன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. மனைவியை அவரது கணவர் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டாமென தடுத்தமையினால், மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.