NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குழந்தை பெற்ற 12 வயது சிறுமி – உயிரை மாய்த்துக்கொண்ட சித்தப்பா!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா உயிரை மாய்த்துள்ள சம்பவம்ஒன்று பதிவாகியுள்ளது.

மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்தத்தையும் சந்தேக நபரின் இரத்தத்தையும் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நீதிமன்றில் வழங்கியதை அடுத்து, சந்தேக நபர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவ்பொத்தான ஒலுகஸ்கடவல பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தனது முந்தைய திருமணத்தின் மனைவியை கைவிட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது மனைவியின் சகோதரியின் 12 வயது மகளை இரண்டாவது திருமணத்தில் இருந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையின் இரத்த மாதிரிகள் மற்றும் சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்ப முயன்ற போது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles