NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கூரிய ஆயுதத்ததால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்!

எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே நேற்று காலை இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை அவர் தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக தனது கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போதே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரியல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான சந்தேக நபரின் கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles