NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 15 ஆம் திகதி இரவு விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொள்ளதுடன் 18Kg கேரள கஞ்சாவையும் சந்தேக நபரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles