NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கந்தானை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் தாக்கப்பட்ட அடையாளங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கந்தானை – வெலிகம்பிட்டிய கந்தவத்தை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேறியுள்ள நிலையில், மனைவி சில காலங்களுக்கு முன் காலமானாதால் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்த பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது தாத்தாவைப் பார்க்க வந்தபோது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவரது பேரன் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டின் சமையலறையில் கைகால்கள் கட்டப்பட்டு தரையில் வீசப்பட்ட நிலையில் பாதி அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles