NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கையடக்கத் தொலைபேசி அதிகம் சூடாகிறதா?

காலையிலிருந்து இரவு உறங்கும் வரையில் ஸ்மார்ட் போன் நம் கைகளில்தான் தவழ்கிறது. இருப்பினும் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளினால் ஸ்மார்போன்கள் அதிகமாக சூடாகின்றது.

ஸ்மார்ட்போன் அதிகம் வெப்பமடைந்தால், தொலைபேசியின் செயல்திறன் குறைந்துவிடும். மேலும் அதிக வெப்பம் ஸ்மார்ட்போனின் ஆயுள் காலத்தையும் குறைத்துவிடும்.

அதுமட்டுமின்றி பேட்டரி, போனின் செயல்பாடு என்பவற்றில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன் ஹீட்டாவதை எவ்வாறு குறைக்கலாம் எனப் பார்ப்போம்.

  • நம்மில் அதிகமானோர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், ஸ்மார்ட்போனை சார்ஜில் போட்டுக்கொண்டு பயன்படுத்துவது.இவ்வாறு கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யும்போது பயன்படுத்தினால் அதிலுள்ள பேட்டரி அதிகமாக ஹீட் ஆகிறது. இதன் காரணமாக பேட்டரி சீக்கிரமே கெட்டுவிடும்.
  • ஸமார்ட்போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களை அப்டேட் செய்த பின் பயன்படுத்துங்கள். ஏனென்றால், சில ஆப்ஸ் மொபைல் பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். அடுத்தடுத்த அப்டேட்களில் இதற்கான தீர்வுகள் கிடைக்கும்.
  • அதிக நேரம் தொலைபேசியில் கேம் விளையாடினாலோ, அல்லது வீடியோக்கள், படங்களைப் பார்த்தாலோ கையடக்கத் தொலைபேசி அதிகம் சூடாகலாம்.இவ்வாறு அதிகமாக தொலைபேசி பயன்படுத்தும்போது மொபைலில் உள்ள க்ராபிக்ஸ் கார்டில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக கையடக்கத் தொலைபேசி சூடாகிறது.
  • நமது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யும்போது அதன் ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, மற்ற சார்ஜர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி அதிகம் வெப்பமடைந்து கையடக்கத் தொலைபேசியின் தரம் பாதிப்படையும்.
  • வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம். அதேநேரம் சூடு அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கையடக்கத்தொலைபேசி அதிகமாக சூடாகி வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
  • கையடக்கத் தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்தும்போது அதில் எளிதாக வைரஸ்கள் உட்புக வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸ்கள் தொலைபேசியின் செயல்திறனைக் குறைக்கும்.அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதபோது பின்னால் இயங்கிக்கொண்டிருக்கும் தேவையற்ற ஆப்களை க்ளோஸ் செய்துவிடுங்கள். இதனால் கையடக்கத் தொலைபேசி வெப்பமடைவதை தடுக்கலாம்.

Share:

Related Articles