(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வழங்கியுள்ள விசேட அறிவித்தலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுகர்வோர் மோசடியில் சிக்குவதைத் தடுக்கவும், சர்வதேச மொபைல் சாதன அடையாள IMEI எண்ணைச் சரிபார்க்கும்படியும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.