(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வேகப்பந்து வீச்சாளர் சட்டவிரோத பந்துவீச்சைப் பயன்படுத்தியதை ஐசிசியின் நிகழ்வு குழு உறுதிப்படுத்தியதை அடுத்து, அமெரிக்க வீரர் கைல் பிலிப் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதியன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தைத் தொடர்ந்து 26 வயதான அவர் போட்டி அதிகாரிகளால் புகாரளிக்கப்பட்டார்.
பிலிப்பின் பந்துவீச்சு நடவடிக்கையின் போட்டிக் காட்சிகளை ஈவென்ட் பேனல் மதிப்பாய்வு செய்து, அவர் சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கையைப் பயன்படுத்துகிறார் என்றும், விதிமுறைகளின் 6.7ஆவது பிரிவின்படி, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் முடிவு செய்தது.
அவரது பந்துவீச்சு நடவடிக்கையை மறுமதிப்பீடு செய்ய அவர் சமர்ப்பிக்கும் வரை பிலிப்பின் இடைநீக்கம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.