ஆர்ஜெலியா நகரிலுள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மைதானம் மீது சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டெடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயருமென அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து பொலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.