NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொலைக் குற்றவாளிகள் மூவர் கைது: பொலிஸார் நடவடிக்கை!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் அத்துருகிரிய ஜெரோம் உள்ளிட்ட 3 பேர் வெலிக்கடைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பகுதியில், T- 56 ரகத் துப்பாக்கியுடன் சிலர் நடமாடுகின்றனர் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த கார் ஒன்றும் கையகப்படுத்தப்பட்டது.

கைதானவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles