NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டி உள்ளூர் அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது. 

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். 

அணித்தலைவர் நிதிஷ் ராணா 48 ஓட்டங்கள், வெங்கடேஷ் அய்யர் 31 ஓட்டங்கள், ஜெகதீசன் 27 ஓட்டங்கள் எடுத்தனர். பெங்களூரு அணி சார்பில் வனிந்து ஹசரங்கா, விஜயகுமார் விஷாக் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி அரை சதமடித்து 54 ஓட்டங்களில் அவுட்டானார். 

லாம்ரோர் 18 பந்தில் 3 சிச்கர் உட்பட 34 ஓட்டங்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 22 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 179 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா 3வது வெற்றியைப் பதிவு செய்தது. 

கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சுயாஷ் சர்மா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles