NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் இன்று பாரிய போராட்டம்!

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் (NRPM) பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு கூட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக NRPM அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

“இந்த முன்னோடியில்லாத விற்பனையானது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles