பொலிஸாரின் சிசிடிவி கமெரா அமைப்புடன் பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெரா அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை பொலிஸ் தலைமையகம் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பில் இரண்டாயிரம் தனியார் சிசிடிவி கமராக்கள் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்பட உள்ளன.
குறித்த இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து , இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமராக்களின் வரம்பை விரிவுபடுத்துவதுடன், ஏனைய பகுதிகளில் உள்ள கமெரா அமைப்புகளும் பொலிஸ் கமரா அமைப்புடன் இணைக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேலும் காவல் துறையிடம் 176 கேமரா அமைப்புகள் மட்டுமே உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.