NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு!

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்கினால்; அவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காற்றின் தரமானது நேற்று கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles