நாட்டில் நிலவும் மழையற்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மின்சார பாவனை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமையஇ ஒரு வார நாளில் சாதாரணமாக 43 முதல் 44 ஜிகாவாட் மணி நேரமாக இருந்த மின் நுகர்வு தற்போது சுமார் 51 ஜிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த தொகையில்இ தலா 4 ஜிகாவாட் மணிநேரம் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 35 ஜிகாவாட் மணிநேரத்தை அனல் மின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
மின்சார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களில் நீர் வழங்கல் சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நீர் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
நீர் மின்சார உற்பத்தியை அதிகரித்தால் கொழும்புஇ கண்டி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.