NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரணை பெருந்தோட்டத்துக்கு உரியதான, 2.5 ஏக்கர் காணித் துண்டை பொது மைதானத்துக்காக பாவிக்கக்கூடிய வகையில் ஒதுக்குவதற்காக அதனுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தில் 850 வரையான மாணவர்கள் கல்வி கற்பதுடன், மாணவர்கள் விளையாடுதல் மற்றும் விளையாட்டு விழாக்களை நடாத்துவதற்காக பொருத்தமான விளையாட்டு மைதானம் இன்மை பாரிய குறைபாடாக இருந்து வருகிறது.

அதன்படி, குறித்த காணித்துண்டை இழப்பீடு இன்றி விடுவிப்பதற்கு கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் பணிப்பாளர் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், காணித் துண்டை ஒதுக்கீடு செய்து வழங்குதல் தொடர்பில் குறித்த காணியின் பங்குதாரரான திறைசேரி செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, உரிய காணியில் 2.5 ஏக்கர் காணித்துண்டை ஸ்ரீபாலி வளாகத்துக்கு உரித்தளிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles