NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அச்சுறுத்தலாக விளங்கும் 300 மரங்கள்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300க்கும் அதிகமான மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஆராய்ந்து அச்சுறுத்தல்களை உடனடியாக நீக்குவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பு மாநகர பகுதிகளுக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் 300 மரங்கள் மக்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு அச்சுறுத்தலென அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு, அச்சுறுத்தலின் அளவை மதிப்பீடு செய்து அறிக்கையை வழங்கும். அதனடிப்படையில் மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றுவது அல்லது மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles