வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சினோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.