NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன் மற்றும் மரக்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles