NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சக மனைவியை கத்தியால் குத்திய மாணவன்… !

அனுராதபுரம் – கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், மாணவியை குத்த பயன்படுத்த கத்தியுடன் குறித்த மாணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும், இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், காயமடைந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காரணம் தெரியவரும் எனவும் ரணஜயபுர பொலிஸ் நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles