NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தொலைபேசிகள், பென்ரைவ்களுடன் வர்த்தகர்கள் இருவர் கைது

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 12 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 59 மற்றும் 24 வயதுடைய இரண்டு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது பயணப்பொதிகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles