NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாக வேட்டையாட சென்றவருக்கு ஏற்பட்ட கதி…!

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி நேற்று (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பதுரலிய பிரதேசத்தின் கலகங்கொட பெலட அகலவத்தை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நபர் தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளை அகற்ற முற்பட்டபோது அவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles