சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர், இன்று மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிலவில் சந்திராயன் – 3 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சந்திரயான் – 3 இன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்பதால், திட்டமிட்டப்படி இன்று மாலை 6.04க்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அத்துடன், சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் காட்சியை இன்று மாலை 5.20 முதல் நேரலையில் பார்க்க முடியும்; என இஸ்ரோ தனது டுவிட்டர் பதிவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.