NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்திரயான்-3 வெற்றியை கொண்டாடிய கூகுள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக நேற்று முன்தினம் (23) தரையிறங்கியது.

இந்நிலையில் இச்சாதனையைக் கொண்டாடும் விதமாக உலகின் முன்னணி தேடுபொறியான ‘கூகுள்’ நேற்றைய தினம் டூடுல் எனப்படும் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரமொன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த ‘டூடுல்’ பக்கத்தில் ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முழு பின்னணித் தகவலையும் இணைத்துள்ளது.

கூகுள் தேடுபொறியானது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள்இ பண்டிகை நாட்கள்இ மற்றும் முக்கிய தினங்களின் போது சிறப்பு டூடுலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles