NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தையில் கீரி சம்பாவுக்கு கடும் தட்டுப்பாடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்த நாட்களில் சந்தையில் கீரி சம்பாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போது பொதுக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மரந்தகஹமுல அரிசி சந்தையிலும் கெரி சம்பாவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கீரி சம்பா கட்டுப்பாட்டு விலையை விட 250, 300 ரூபாய்க்கு மேல் இன்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். எனவே இதுதொடர்பில் வர்த்தக அமைச்சரிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் நேரடியாக முடிவெடுப்பார் என நம்பப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை மேலும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும். ஆனால், கீரி சம்பா விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மாற்று வழியை உருவாக்க வேண்டும் என அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles