NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சனத் நிஷாந்தவின் பூதவுடலை புத்தளத்திற்கு எடுத்துச் செல்ல ஆயத்தம்!

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளனர்.

மஹவ பிரதேசத்தில் வசிக்கும் அனுருத்த ஜயக்கொடி என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles