பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பிய போது இடைமறித்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.
27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பிய போது இதன்போது சனத் நிஸாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
இதையடுத்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.