இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இணைந்த சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய கலாசார மண்டபத்தில் நாளை (12) இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஐயப்ப சுவாமிமாரை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஐயப்ப சுவாமிமாருக்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளல், அமைப்பின் நோக்கங்களை வெளியிடுதல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.
மேலும், சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள மூத்த குருசுவாமிமார்கள், சப்ரகமுவ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவாமிமார்கள், இரத்தினேஸ்வரம் ஆலய நிர்வாக சபையினர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.