சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நாளொன்றுக்கு 3.5 மில்லியன் கனமீற்றர் வீதம் நீர், இன்று முதல் 3 நாட்களுக்கு பயிர்ச்செய்கைக்காக திறந்து விடப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சமனல வாவியிலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.
இதன்படி, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.