சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிப்பது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அடங்கிய பிரேரணை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, விவசாயத்திற்குத் தேவையான நீரை விநியோகிக்குமாறு வலியுறுத்தி எம்பிலிப்பிட்டிய விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போரட்டம் 2 வாரங்களையும் கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில். பயிர்ச் செய்கைக்கான நீரை விடுவிக்கும் வரை தங்களின் சத்தியாகிரப் போரட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.