(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாளைய தினம் (26) இடம்பெறவுள்ள சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.