சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதித் தேர்தல் மூலோபாயத் திட்டத்தை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு இன்று காலை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில்முனைவோர் சர்வஜன வேட்பாளர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்றது.
சர்வஜன அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி குறித்த மூலோபாய திட்டத்தை மக்கள் மயப்படுத்தினர்..
மக்களின் ஆலோசனைகளால் உருவான இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் மூலோபாயத் திட்டம் இதுவாகும்.
66 பக்கங்களைக் கொண்ட இந்த மூலோபாயத் திட்டத்தின் மூலம் தேசிய முன்னுரிமைகளாக எட்டு துறைகளில் அத்தியாவசிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி
- ஊழல்வாதிகளை தண்டித்தல்
- இராணுவ வீரர்களை பாதுகாத்தல்
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி
- பொருளாதார சார்புநிலையை நீக்குதல்
- விவசாயிஇ தொழில்முனைவோர் போன்று கட்டுமான துறையை பாதுகாத்தல்
- நாட்டின் சுயாதீனத்தை உறுதி செய்தல்
- சாதிய ஒடுக்குமுறையை ஒழித்தல்
- சமூகத்தை அழிக்கும் சூழ்ச்சிகளை முறியடித்தல்
பெருமைமிக்க தேசிய அடையாளத்துடன் கூடிய செழிப்பான நாட்டை உருவாக்குவதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் அதிகாரமளிக்கும் இந்த மூலோபாய வேலைத்திட்டத்தின் ஊடாகஇ சர்வஜன அதிகாரம் தொழில்முனைவோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.