NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச சிலம்பம் போட்டி – இரத்தினபுரி இளைஞர் தங்கம் வென்றார்!

இரத்தினபுரி – கஹவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞன், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

25 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டியில், இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞன், தங்கப்பதக்கத்தை வெற்றிப் பெற்றுள்ளார்.

இரத்தினபுரி, கஹாவத்த, கட்டங்கி பகுதியைச் சேர்ந்த இவர், மலேசியாவுக்கு தொழில் நிமிர்த்தமாக சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles