NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் வனிந்து ஹசரங்க!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்ட வீரரான வனிந்து ஹசரங்க சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வனிது ஹசரங்க தமது இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் முழுது திறமையையும் வெளிப்படுத்தி இலங்கைக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க இதுவரையில் இலங்கைக்காக அவர் 4 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஒரு துடுப்பாட்ட வீரராக 196 ரன்கள் குவித்துள்ளதுடன், 4 டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வனிது ஹசரங்க முதன்முறையாக 2020ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்பொழுது நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பி-லவ் கண்டி அணிக்காக விளையாடி வருகின்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles