NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாய்ந்தமருது பகுதியில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு – மதரஸா நிர்வாகி கைது!

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மதர்ஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று (05) இரவு மதரஸாவை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மதரஸாவில் தங்கியிருந்து குர்ஆன் கல்விகற்று வந்த மாணவன் சம்பவதினமான நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் எனவும் மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே அதிகளவிலான பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்ததுடன் நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles