NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி நபர் பலி!

யாழ். சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று காலை 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது.

நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மின்சாரம் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles