NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்த 2 மாத குழந்தை..!

மாத்தறை மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததை அடுத்து குழந்தை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 2 மாதமும் 27 நாட்களை உடைய இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு நேற்று காலை பால் கொடுக்கப்பட்ட போது குழந்தைக்கு பால் அடைத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை கொட்வில பிரதேசத்தில் அமைந்துள்ள மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அப்போது குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை எனவும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் குழந்தையை வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் ஊடாக வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதற்குள் குழந்தை இறந்துவிட்டதாகவும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாத்தறை பொது மயானத்தில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போனமை தொடர்பில் கடந்த மாதம் செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles