தென்கிழக்காசிய நாடுகள் வட்டாரத்தில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை நிலவுகிறது. 2019ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பமானஇ வறட்சியான பருவநிலை இப்போது காணப்படுகிறது.
எல் நினோ பருவநிலை மாற்றத்தால், அடுத்த சில மாதங்களுக்குத் வெப்பமான, வறண்ட வானிலை ஏற்படக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘பாசிட்டிவ் இண்டியன் ஓஷியன் டைபோல்’ எற்ற நிகழ்வால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளால் சிங்கப்பூரிலும் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சினை ஏற்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஷ் ஃபூ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தற்போது வறண்ட பருவநிலை நிலவி வருவதால், புழுதிப்புயல் ஏற்பட்டு புகைமூட்ட பாதிபு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை கையாள அங்குள்ள மருத்துவமனைகளும் தயாராகி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.