சிங்கப்பூரில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எஷான் தாரக கோட்டகே என்ற 30 வயதுடைய நபரே தனது மனைவியை கெட்டோன்கேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொலை செய்துள்ளதாக சேனல் நியூஸ் ஏசியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வந்தி மதுகா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை 10.45க்கும் மாலை 4.42க்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கொலையின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







