(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணை பகுதியில் சிசுவின் சிதைவடைந்த உடற்பாகம் நேற்று (10) மீட்கபட்டுள்ளது.
அயலவர்களால் குறித்த உடற்பாகம் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிசுவின் உடற்பாகத்தை மீட்டுள்ளனர்.
மேலும், சட்ட வைத்தியதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து ஆராய்ந்ததுடன் சுடலைப் பகுதியில் இருந்து சடலம் விலங்குகளால் இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் பகுதியில் அண்மையில் குழந்தை பிறசவித்தவர்களை தேடும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் ஓடும் சிறிய ஓடையில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இதேவேளை, முல்லேரியா – கௌனிமுல்ல பகுதியில் பிறந்த சிசுவை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசிய சம்பவமும் நேற்று முன்தினம் பதிவாகியிருந்தது.
இதனடிப்படையில், இறந்த சிசுவின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.