NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சித்திரையில் பிறந்ததால் குழந்தையை கொலை செய்த தாத்தா!

இந்தியாவின் தமிழ்நாடு – அயலூர் மாவட்டத்தில் சித்திரையில் பிறந்த குழந்தையை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

‘சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆபத்து’ என பழமைவாதிகள் கூறுவார்கள்.இவ்வாறு ஒரு குடும்பத்திடம் கூறியமையினால் அக்குழந்தையின் தாத்தா விபரீத முடிவெடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா(21). இவருக்கும் கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(29) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சித்திரை மாதம் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால், தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி அதிகாலை குளியறையில் வாளி தண்ணீரில் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில், இறந்து கிடந்ததை கண்டு குழந்தையின் தாய் அதிர்ச்சில் உறைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டதற்கமைய, பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றது, சங்கீதாவின் தந்தை வீரமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

Share:

Related Articles