NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49வது வயதில் காலமானார்.

இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

சகல துறையிலும் திறமையானவராக திகழ்ந்த இவர், 1993-2005 க்கு இடையில் 65 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளையும் 1,990 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். மேலும் 189 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2,943 ஓட்டங்களையும் ,239 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்டதால், கிரிக்கெட் விளையாட்டு துறையில் ஈடுபட அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles