NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாவேயில் மரண தண்டனை இரத்து!

ஆப்பிரிக்க நாடான சிம்பாவேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

அதிலும் குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார்.

கடந்த 1960களில் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்டவரான எம்மர்சன் மனங்காக்வா, மரண தண்டனை முற்றிலுமான ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். அதிபரின் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வந்தார்.

மேலும், கடந்த வாரம் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. மரண தண்டனை இரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு அதிபர் எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்ததால். தற்போது சிம்பாவேயில் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிம்பாவேயில் இப்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். தற்போது புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சிம்பாவேயில் கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles