கொழும்பில் 10 நிமிடங்கள் மழை பெய்தால் பல நகரங்கள் நீரில் மூழ்கிவிடுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக 5 நிமிடங்கள் மாத்திரம் பெய்த மழையால் பல நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தெமட்டகொடை, ஆமர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் நேற்றைய தினம் நீரில் மூழ்கியதால் பணிக்கு செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பல தசாப்தங்களாக மக்கள் இவ்வாறு நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் உடனடியாக தீர்வு வழங்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.